முக்காடு அணிந்தபடி மாணவிகளை தங்கள் வளாகத்துக்குள் அனுமதிக்க முடியாது என்று கிறிஸ்தவ பள்ளி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
உத்தரபிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ பள்ளி ஒன்று உள்ளது. இங்கு 7-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இரண்டு பேர், பர்தா அணிந்து வந்துள்ளனர். அதோடு தலையில் முக்காடு அணிந்தும் வந்துள்ளனர். இதை அனுமதிக்க முடியாது என்று பள்ளி நிர்வாகம் அந்த மாணவிகளின் பெற்றோருக்கு கடிதம் அனுப்பியது. அதில், பள்ளி வளாகத்தில் மத சம்பிரதாயத்துக்கு இடம் இல்லை என்றும் முக்காடு அணிவது பள்ளி சீருடை திட்டத்துக்கு எதிராக இருப்பதாகவும் கூறியிருந்தது.
’இஸ்லாம் மதத்தின் படி பெண் குழந்தைகள் 9 வயது வரை தலைமுடியை மறைத்து இருக்க வேண்டும். அதற்காக முக்காடு அணிந்து பள்ளிக்கு செல்கிறார்கள். பள்ளியின் சட்ட திட்டங்களுக்கு எதிராக இருப்பதாகக் கூறி அனுமதி மறுக்கின்றனர்’ என்று மாணவியின் பெற்றோர் கூறியுள்ளனர்.
இதையடுத்து இதற்கு தீர்வு காண, மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் முறையிட்டுள்ளனர். இந்தப் பிரச்னை அந்த மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.