வளையல்களை விற்று நிவாரணம் அளித்த தலைமை ஆசிரியர்

வளையல்களை விற்று நிவாரணம் அளித்த தலைமை ஆசிரியர்
வளையல்களை விற்று நிவாரணம் அளித்த தலைமை ஆசிரியர்
Published on

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்தினருக்கு வளையல்களை விற்று பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் நிவாரணம் வழங்கியுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் பேரெய்லியில் தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் கிரண் ஜாக்வால். புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என நினைத்த இவர், அதற்காக தனது தங்க வளையல்களை விற்றுள்ளார். அதன்மூலம் கிடைத்த ரூ.1.5 லட்சத்தை பிரதமர் நிவாரண நிதி கணக்கில் செலுத்தியுள்ளார். இவரது இந்த நிகழ்வு அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிரண் பேசும் போது, “உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் மனைவிகளை நான் பார்த்தபோது, அவர்களுக்காக என்னால் முடிந்த எதையாவது செய்ய வேண்டும் என நினைத்தேன். அதன்பின்னர் எனது வளையல்களை விற்க முடிவு செய்தேன். அதன்மூலம் கிடைத்த பணத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு அனுப்பினேன். அந்த வளையல்கள் எனக்காக என் தந்தை வாங்கி கொடுத்தவை. மக்களும் சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பத்திற்கு உதவ முன்வர வேண்டும். நம் நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் உள்ளனர். அவர்கள் தலைக்கு ஒரு ரூபாய் கொடுத்தால் கூட, ஒரு பெரும் தொகையை சேகரிக்க முடியும்” என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com