உத்தரப்பிரதேச மாநிலத்தில் கனமழை ஏற்பட்ட வெள்ளத்தில் இடுப்பளவு நீரில் நின்றபடி தேசியக்கொடியை ஏற்றி வணக்கம் செலுத்திய போலீஸாரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நேற்றைய சுதந்திரதினத்தன்று வெள்ளம் பாதித்த அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு பள்ளியில் மாணவர்களும், ஆசிரியர்களும் தேசியக் கொடியை ஏற்றிய புகைப்படம் வைரலனாது. அதேபோல கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ள உத்தரப்பிரதேசத்தின் பஹ்ரைக் மற்றும் சித்தார்த்நகர் காவல்நிலையங்களில் போலீஸார் இடுப்பளவு வெள்ள நீரில் நின்றபடி கொடியேற்றி வணக்கம் செலுத்தினர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
இதுகுறித்து, உத்தரப்பிரதேச டிஜிபி ஸ்ரீ சுல்கான் சிங் கூறும்போது, இடுப்பளவு நீரில் கொடியேற்றிய காவலர்களுக்கு எனது வணக்கம். அவர்கள் அனைவருக்கும் விருது வழங்கப்படும். அவர்களின் தேசப்பற்றை நினைத்து பெருமையாக உள்ளது என்று கூறினார்.