திருமணப் பதிவு கட்டாயம்: உ.பி அரசு முடிவு

திருமணப் பதிவு கட்டாயம்: உ.பி அரசு முடிவு
திருமணப் பதிவு கட்டாயம்: உ.பி அரசு முடிவு
Published on

திருமணப் பதிவை கட்டாயமாக்க உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான மசோதா மாநில பெண்கள் நலத்துறை சார்பில் அடுத்து வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படலாம் எனத் தெரிகிறது. 

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நாடு முழுவதும் திருமணப் பதிவு என்பது கட்டாயமாக்கப்பட்ட ஒன்று. அதன்படி உத்தரப்பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. புதிதாக கொண்டு வரப்பட உள்ள சட்டத்தின்படி, தம்பதிகள் தங்களது திருமணத்தை பதிவு செய்யவில்லை எனில் அரசின் எந்தவித சலுகையும் அவர்களுக்கு கிடைக்காது. முஸ்லிம் மக்களுக்கும் இந்த கட்டாய திருமண பதிவு பொருந்தும் என்றும் கூறப்படுகிறது.

உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் முதலமைச்சராக பதவி வகித்த போதும், கட்டாய திருமண பதிவு தொடர்பாக ஆலோசிக்க கமிட்டி அமைக்கப்பட்டது. ஆனால் முஸ்லிம் மக்கள் எதிர்ப்பு காரணமாக அது நிறைவேறாமல் போனது. இமாச்சலப் பிரசேதம், பீகார், ராஜஸ்தான், கேரளா உள்பட பல மாநிலங்கள் ஏற்கனவே திருமணப் பதிவை கட்டாயமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com