குற்றம் செய்யாமலேயே 1,653 நாட்கள் சிறையில் வாடிய இளைஞர்! உண்மையை உடைத்த பெண் - மிரளவைத்த தீர்ப்பு!

பொய் வழக்கு அம்பலம்: இளம்பெண்ணுக்கு நீதிமன்றம் விதித்த தண்டனை
நீதிபதி
நீதிபதிfree pik
Published on

4 ஆண்டுகளுக்கு பின் உண்மையை உடைத்த இளம் பெண்..நீதிமன்ற கொடுத்த "ஷாக்"... தீர்ப்பு? என்ன நடந்தது பார்க்கலாம்?

உத்தரபிரதேச மாநிலம் பரேலி பகுதியைச் சேர்ந்தவர் ராகவ் என்ற அஜய்குமார் என்பவர், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம்பெண் ஒருவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், "அஜய்குமார் தன்னை டெல்லி கடத்திச் சென்று மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தார்" என கூறப்பட்டிருந்தது.

நீதிபதி
“அப்பா.. இது அம்மாவின் கால் மாதிரி தெரியுது..” - சினிமாவை விஞ்சிய நெஞ்சை பதறவைத்த கொலை சம்பவம்!

இதனையடுத்து, புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், அஜய்குமாரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பாதிக்கப்பட்டதாக கூறப்படும், இளம்பெண்ணிடம் நீதிபதி விசாரணை மேற்கொண்ட போது, அஜய்குமார் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என கூறினார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், அஜய்குமாருக்கு 1,653 நாட்கள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக இந்த வழக்கில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. பின்னர் மீண்டும் இந்த வழக்கு கூடுதல் நீதிமன்றம் முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த இளம்பெண்ணிடம் நீதிபதிகள் மீண்டும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இளம்பெண் கூறிய பதில் ஒட்டுமொத்த நீதிமன்றத்தையும் அதிரச் செய்தது.

"ராகவ் என்ற அஜய்குமார் தன்னை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்யவில்லை. அஜய்குமார் என்னுடைய அக்கா பணிபுரியும் அலுவலகத்தில் ஒன்றாக பணிபுரிந்து வந்தார். அஜய்குமாரும், என்னுடைய அக்காவும் பழகியது என்னுடைய அம்மாவிற்கு பிடிக்கவில்லை. அவர்கள் இருவரையும் கண்டித்தார். அவர்களை கேட்கவில்லை என்பதால், அஜய்குமாரை பழி வாங்க நினைத்தார். என்னை அஜய்குமார் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார் என பொய் புகார் அளிக்க வேண்டும் என என்னுடைய அம்மா கூறியபடி நானும் பொய் புகார் அளித்தேன்" என்றார்.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், பொய் புகார் கூறிய இளம்பெண்ணுக்கு, கடந்த 5

ஆண்டுகளுக்கு முன்பு அஜய்குமாருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனையான, 1,653 நாட்கள் சிறை தண்டனை இளம்பெண்ணுக்கு விதித்து உத்தரவிட்டது. மேலும் 1,653 நாட்கள் சிறையில் இருந்த அஜய்குமார் ரூ.5,88,822.47 ஊதியத்தை இழந்துள்ளார். இந்த ரொக்க பணத்தையும் பொய் புகார் அளித்த இளம்பெண் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com