உ.பி: மாற்றுத்திறனாளியை தலையில் தட்டி கீழே தள்ளிவிட்ட காவலர்

உ.பி: மாற்றுத்திறனாளியை தலையில் தட்டி கீழே தள்ளிவிட்ட காவலர்
உ.பி: மாற்றுத்திறனாளியை தலையில் தட்டி கீழே தள்ளிவிட்ட காவலர்
Published on

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர், மாற்றுத்திறனாளியை வலுக்கட்டாயமாக தாக்கி கீழே தள்ளிவிடும் வீடியோ ஆதாரத்தை வைத்து பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

காண்போர் இதயங்களில் கருணையை வரவழைக்கும் இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூகவலைதளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள கனோஜ் காவல்நிலையத்தில் மாற்றுத்திறனாளியின் தலையின் பின்னே அந்தக் காவலர் தட்டுகிறார். பிறகு அவரைப் பிடித்து கீழே தள்ளியதால், தடுமாறி கீழே விழுகிறார்.

அப்போது அருகில் இருந்த காவலர்கள் ஏதும் செய்யாமல் அமைதியாக இருந்துள்ளனர். அவர்களின் முன்னால் மற்றொரு காவலரால் மாற்றுத்திறனாளி தாக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி இ ரிக்சா ஓட்டுநராக உள்ளார். சாலையின் ஓரத்தில் இருந்து பயணிகளை ஏற்றிச்சென்றதால் காவலர் கோபமாக அவரைத் தாக்கியுள்ளார்.

பயணிகளை சாலையின் ஓரமாக நின்று ஆட்டோவில் பயணிகளை ஏற்றுச் சொன்னபோது, தன்னை மாற்றுத்திறனாளி நபர் தவறாகப் பேசியதாகவும் காவலர் தெரிவித்துள்ளார். இதனையறிந்த கனோஜ் மாவட்ட காவல்துறை அதிகாரி அமரேந்திர பிரதாப் சிங், மாற்றுத்திறனாளியைத் தாக்கிய காவலரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com