விமானம், கட்டுமானத்துறையில் 100% நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்க மத்திய அமைச்சரவை முடிவு
செய்துள்ளது.
மத்திய அமைச்சரவை முடிவால் நஷ்டத்தில் இயங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனத்தை விற்பனை செய்ய இயலும் என்பதால்,
அந்தத் துறையில் 100% நேரடி அந்நிய முதலீட்டுக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன்
கட்டுமானத்துறையிலும் 100% அந்நிய முதலீடு வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுதவிர
எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டிற்கான புதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ள அமைச்சரவை, முதல் கட்டமாக ரூ.3950
கோடியை அதற்காக ஒதுக்கீடும் செய்துள்ளது.