வகுப்புவாதத்தினால் கொலைக் களமாக மாறிய உத்தரபிரதேசம்

வகுப்புவாதத்தினால் கொலைக் களமாக மாறிய உத்தரபிரதேசம்
வகுப்புவாதத்தினால் கொலைக் களமாக மாறிய உத்தரபிரதேசம்
Published on

நாடு முழுவதும் மதக் கலவரங்களின் எண்ணிக்கையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் மக்களவையில் பேசிய போது இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் நாடு முழுவதும் நடைபெற்ற 822 மதக் கலவரங்களில் 111 பேர் கொல்லப்பட்டதாகவும், 2,384 பேர் படுகாயம் அடைந்ததாகவும் கூறினார். இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற 195 மதக் கலவரங்களில் 44 பேர் கொல்லப்பட்டனர், 542 பேர் காயம் அடைந்தனர். மற்ற எல்லா மாநிலங்களை காட்டிலும் உத்தரபிரதேசத்தில் பல மடங்கு உயிரிழப்பு அதிகம்.

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட கலவரங்களில் 9 பேர் கொல்லப்பட்டதாகவும், 229 பேர் காயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் 12, மேற்குவங்காளம் 9, மத்திய பிரதேசம் 9, குஜராத் 8, பீகார் 3 பேர் கொல்லப்பட்டதாக மக்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015, 2016 ஆம் ஆண்டுகளை விட 2017-ம் ஆண்டு மதக் கலவரங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2016-ம் ஆண்டினை பொறுத்தவரை 703 மதம் தொடர்பான 703 வன்முறை சம்பவங்களில் 86 பேர் கொல்லப்பட்டனர், 2,321 காயம் அடைந்தனர். அதேபோல், 2015-ம் ஆண்டில் நிகழ்ந்த 751 சம்பவங்களில் 97 பேர் கொல்லப்பட்டனர், 2,264 பேர் காயம் அடைந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com