தலித் மக்கள் ராணுவத்தில் சேர்ந்தால் நாட்டு சாராயத்திற்கு பதில் ரம் குடிக்கலாம் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
புனேயில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்குதல் துறையின் இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, தலித் இளைஞர்களுக்கு ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றில் இட ஒதுக்கீடு அளிக்கும் நேரம் வந்துவிட்டதாக கூறினார். அத்துடன் அவர்கள் ராணுவத்தில் சேர்ந்தால் நாட்டு சாரயத்திற்கு பதிலாக ரம் குடிக்கலாம் என்றும், அவர்களுக்கு உண்ண நல்ல உணவு கிடைக்கும் என்றும் தெரிவித்தார். மத்திய அமைச்சரின் இத்தகைய பேச்சு சர்ச்சையை எழுப்பியுள்ளது.