"முதிர்ச்சியடையாத மனிதர் ராகுல் காந்தி" - மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ விமர்சனம்

வெளிநாடுகளுக்கு சென்று இந்தியாவை அவமதிக்கவேண்டும் என்பதை ராகுல் காந்தி வாடிக்கையாக வைத்திருப்பதாக, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ விமர்சித்துள்ளார்.
வெளிநாடுகளுக்கு சென்று ராகுல் காந்தி- கிரண் ரிஜிஜூ
வெளிநாடுகளுக்கு சென்று ராகுல் காந்தி- கிரண் ரிஜிஜூ முகநூல்
Published on

அமெரிக்காவில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய இந்திய நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவில் வேலையின்மை பிரச்னை இருந்துவருவதாகவும், உற்பத்தியில் சீனா முன்னணியில் உள்ளதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் கடுமையாக விமர்சித்த நிலையில், அவரின் அந்த கருத்துக்கள் தற்போது பேசுபொருளாகி உள்ளன.

இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, ”ராகுல் காந்தி முதிர்ச்சியடையாதவர் என்பது அவரின் பேச்சு மூலம் மீண்டும் நிரூபணமாகி உள்ளது. வெளிநாட்டிற்கு சென்று இந்தியா, பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு எதிராக ராகுல் காந்தி தொடர்ந்து பேசிவருகிறார். இதுபோன்ற செயல்களை ராகுல் காந்தி நிறுத்திக்கொள்வார் என எனக்கு தோன்றவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளுக்கு சென்று ராகுல் காந்தி- கிரண் ரிஜிஜூ
ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: காங்கிரஸ் ஆம் ஆத்மி கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வி..

இதேபோல தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு, “சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பை குறைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் ராகுல் காந்தி பேசிவருகிறார்” என குற்றஞ்சாட்டி உள்ளார்.

இதற்கிடையே, பாஜகவின் விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இந்தியாவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவமதிக்கவில்லை. இனியும் அவர் அவமதிக்கமாட்டார்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com