மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு கொரோனா

மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு கொரோனா
மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு கொரோனா
Published on

மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில், மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என அரசியல் கட்சியினரும் தப்புவதில்லை. அந்த வகையில், தற்போது மத்திய ஜல் சக்திதுறை அமைச்சர் கெஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் ஆலோசனைப்படி நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். கடந்த காலங்களில் என்னை சந்தித்தவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சத்லுஜ் யமுனா இணைப்பு பிரச்சினை தொடர்பாக ஷெகாவத், ஹரியானா முதல்வர் எம்.எல் கட்டரை செவ்வாய்க்கிழமை சந்தித்தார். கொரோனா சிகிச்சைக்காக டெல்லிக்கு அருகிலுள்ள குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்படுவார் என்று அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com