”எனது துறையில் அனைத்து கோப்புகளும் இந்திக்கு மாற்றப்பட்டுள்ளன” - அமித் ஷா

”எனது துறையில் உள்ள அனைத்துத் தகவல் தொடர்புகளையும், கோப்புகளையும் இந்தியில் மாற்ற எனக்கு 3 ஆண்டுகள் ஆகின. உள்துறையில் எந்தக் கோப்புகளும் ஆங்கிலத்தில் இல்லை” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அமித் ஷா
அமித் ஷாஎக்ஸ் தளம்
Published on

இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. இதையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், “அனைத்து இந்திய மொழிகளும் பெருமையும் பாரம்பரியமுமிக்கது. அவற்றை வளப்படுத்தாமல் நாம் முன்னேற முடியாது. அலுவல் மொழியான இந்தி, ஒவ்வொரு இந்திய மொழியுடனும் பிரிக்கமுடியாத உறவைக் கொண்டுள்ளது.

 அமித் ஷா
அமித் ஷாFile image

இந்த ஆண்டு, இந்தி மொழி நாட்டின் அலுவல் மொழியாக பொதுத் தொடர்பு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டின் 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அனைத்து இந்திய மொழிகளையும் ஒன்றாகக் கொண்டு செல்வதன் மூலம், வளர்ச்சியடைந்த இந்தியாவின் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கு அலுவல் மொழியான இந்தி தொடர்ந்து பங்களிக்கும் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க: ”தயவுசெய்து என்னைக் காப்பாத்துங்க”-குவைத்தில் சித்திரவதை அனுபவிக்கும் ஆந்திரப் பெண் வீடியோ வெளியீடு!

அமித் ஷா
அமெரிக்கா | மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து பேசிய ராகுல் காந்தி.. கண்டனம் தெரிவித்த அமித் ஷா!

இந்த நிலையில், இந்தி திவாஸ் நிகழ்வில் நான்காவது அகில் பாரதிய ராஜ்பாஷா சம்மேளனத்தில் உரையாற்றிய அமித் ஷா. “75 ஆண்டுகளில் இந்தி பல ஏற்றததாழ்வுகளைக் கண்டுள்ளது. ஆனால் இந்த நேரத்தில், எந்த உள்ளூர் மொழியுடனும் இந்திக்கு போட்டி இல்லை என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் ஒரு நண்பன் மற்றும் அவை ஒன்றையொன்று பூர்த்திசெய்கின்றன.

குஜராத்தி, மராத்தி, தெலுங்கு, மலையாளம், தமிழ் என ஒவ்வொரு மொழியும் இந்தியையும், அதுபோல் இந்தி ஒவ்வொரு மொழியையும் பலப்படுத்துகிறது. இந்தியை வலுப்படுத்துவதன் மூலம், இந்த மொழிகள் அனைத்தும் நெகிழ்வானதாகவும் வளமானதாகவும் மாறும். எனது துறையில் உள்ள அனைத்துத் தகவல் தொடர்புகளையும் கோப்புகளையும் இந்தியில் மாற்ற எனக்கு 3 ஆண்டுகள் ஆகின. உள்துறையில் எந்தக் கோப்புகளும் ஆங்கிலத்தில் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: கொல்கத்தா | உண்மை கண்டறியும் சோதனைக்கு மறுப்பு தெரிவித்த சஞ்சய் ராய்.. நார்கோ டெஸ்ட் என்றால் என்ன?

அமித் ஷா
ஒடிசாவை தமிழர் ஆள வேண்டுமா? - உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com