காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை தாக்கல் செய்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி வருகிறார்.
கடுமையான எதிர்ப்புகளுக்கிடையே நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று கூடியது. நேற்று மாநிலங்களவையில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீது மக்களவையில் விவாதம் தொடங்கியுள்ளது.
மாநிலங்களவையில் மறுசீரமைப்பு ஆதரவாக 125 பேரும் எதிராக 61 பேரும் வாக்களித்தனர். மக்களவையில் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யக்கூடாது எனவும் ஐ.நா சபையில் காஷ்மீர் விவகாரம் நிலுவையில் உள்ளபோது மசோதாவை கொண்டு வந்தது ஏன் எனவும் காங்கிரஸ் மக்களவை குழுத்தலைவர் ரஞ்சன் சவுத்ரி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
ஜம்மு காஷ்மீரின் தற்போதைய நிலை என்ன என்று கூட தெரியவில்லை என காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.