கோவிஷீல்டு முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இரண்டாவது தடுப்பூசி போடுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு மாநில அரசுகளுக்கு எழுதிய கடிதத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டாவது டோஸ் செலுத்துவதற்கான கால அளவை 4 வாரத்தில் இருந்து 6 முதல் 8 வாரங்களாக அதிகரிக்க அறிவுறுத்தியுள்ளது. தடுப்பூசிகளிடையே கால அவகாசத்தை நீட்டிப்பதால் கூடுதல் பலன் அளிப்பதாக மத்திய அரசு அந்தக் கடிதத்தில் கூறியுள்ளது.
ஏற்கெனவே கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டாவது டோஸ் 4 முதல் 6 வாரங்களில் போட பரிந்துரைக்கப்பட்ட நிலையில் 4 வார இடைவெளியில் போடப்பட்டு வந்தது. தற்போது இந்த அவகாசத்தை நீட்டிக்க மத்திய அரசு கூறியுள்ளது. மேலும் கால அவகாச நீட்டிப்பு கோவிஷீல்டு தடுப்பூசிக்கு மட்டுமே பொருந்தும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.