இந்தியா
ஆந்திர தலைநகர்| அமராவதிக்கு அடித்த ஜாக்பாட்.. அள்ளிவீசிய மத்திய அரசு!
ஆந்திர பிரதேச மாநில தலைநகராக உருவாகி வரும் அமராவதிக்கு ரயில் இணைப்பு அளிக்க 2 ஆயிரத்து 245 கோடி ரூபாயை மத்திய அமைச்சரவை ஒதுக்கியுள்ளது.
ஆந்திர பிரதேச மாநில தலைநகராக உருவாகி வரும் அமராவதிக்கு ரயில் இணைப்பு அளிக்க 2 ஆயிரத்து 245 கோடி ரூபாயை மத்திய அமைச்சரவை ஒதுக்கியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். அமராவதியிலிருந்து சென்னை உட்பட நாட்டின் முக்கிய நகரங்களுக்கு ரயில் சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத், கொல்கத்தா போன்ற நகரங்களிலிருந்து அமராவதிக்கு பயணம் மேற்கொள்ளும் வகையில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் தொகுப்பை அறிந்துகொள்ள இந்த வீடியோவைப் பார்க்கவும்.