மத்திய பட்ஜெட் 2024 - 2025 | பீகார், ஆந்திராவுக்கு அடித்தது ஜாக்பாட்... வெளியான அதிரடி அறிவிப்புகள்!

மத்திய பட்ஜெட் 2024-2025ல் பீகார் ஆந்திரா மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து காணலாம்.
மத்திய பட்ஜெட் 2024-2025
மத்திய பட்ஜெட் 2024-2025புதிய தலைமுறை
Published on

18வது மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்ற நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த மாதம் பதவி ஏற்றது. இதில் 2019ம் ஆண்டு முதல், நாட்டின் முழு நேர நிதியமைச்சராக இருந்து வரும் நிர்மலா சீதாராமனே மீண்டும் நிதியமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில், 2024-2025 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்து வருகிறார்.

மக்களவை தேர்தலுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட சூழலில், தற்போது தேர்தலுக்கு பிறகு தாக்கல் செய்யும், முதல் முழு பட்ஜெட் இதுவாகும். இந்த பட்ஜெட்டில் பீகார் மற்றும் ஆந்திரா மாநிலங்களுக்கு என சிறப்பு திட்டங்கள் பலவற்றை வழங்கியுள்ளார் நிதியமைச்சர்.

இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் ஆற்றிய பட்ஜெட் தாக்கல் தொடர்பான உரையில், “எங்களது கொள்கை மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கைதான் இந்த வெற்றி. அதை நாங்கள் தொடர்ந்து நிறைவேற்றுவோம். நாட்டில் பெண்களுக்கும் ஏழைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. போலவே விலைவாசியும் கட்டுக்குள் உள்ளது.

நிலைத்தன்மை இல்லாத சூழலில்தான் தற்போதும் உலக வர்த்தகம் என்பது இருக்கிறது. கப்பல் போக்குவரத்து துறையில் தொடர்ந்து பிரச்னைகள் நிலவுகின்றன. இது பண வீக்கத்துக்கு வழிவகுக்கிறது. இந்தியாவின் பணவீக்கம் குறைவாகவே இருந்து வருகிறது” என்றார்.

மத்திய பட்ஜெட் 2024-2025
🔴LIVE | நிறைவடைந்தது பட்ஜெட் 2024-25 | ‘இதெல்லாம்தான் இலக்கு’ - நிதியமைச்சர் உரையின் முழு தொகுப்பு!

பீகார், ஆந்திராவுக்கு நிதி!

தொடர்ந்து பீகார், ஆந்திரா குறித்து பேசுகையில், பீகார், ஜார்க்கண்ட், ஒரிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் மேற்குவங்க மாநிலங்களுக்கு புதிய திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக,

பீகார் மாநிலத்துக்கு பல சாலை திட்டங்கள் வரவுள்ளன. ரூ. 26,000 கோடி ரூபாய் பீகார் மாநிலத்தில் சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் அமைக்க ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பீகார் மாநிலத்தில் உள்ள கயா முதல் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அம்ரிஸ்தர் வரை புதிய பொருளாதார வளர்ச்சி திட்டம் கொண்டுவரப்படுகிறது.

ஆந்திராவை பொறுத்தவரை விசாகப்பட்டினம் - சென்னை தொழில்பேட்டைக்கு கூடுதல் ஒதுக்கீடுகள் அறிவிக்கப்படுகின்றன. ஆந்திராவின் பின்தங்கியுள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ரூ. 15 ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். பீகாரில் விமான நிலையங்கள், மருத்துவக்கல்லூரிகள் அமைக்க கூடுதல் நிதி தரப்படும். ஆந்திராவில் தலைநகர் நிறுவ நிதி சார்ந்து, ரூ. 5000 கோடி ஒதுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் 2024-2025
தொடர்ந்து 7வது முறையாக பட்ஜெட் தாக்கல்.. புது சாதனை படைக்கப்போகும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

பாஜகவின் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் தெலுங்கு தேசம் கட்சிகள் பல கோரிக்கைகள் எழுப்பிய நிலையில், தற்போது பீகார், ஆந்திர மாநிலங்களுக்கு தனியாக பல விஷயங்களில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது கவனிக்கப்படும் அம்சமாக மாறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com