மத்திய பட்ஜெட் 2024| வருமான வரி விதிப்பு முறையில் செய்யப்பட்ட மாற்றங்கள் என்ன.. முழு விவரம்!

புதிய வரி சலுகையை தேர்ந்தெடுப்பவர்கள் ரூ.17,500 சேமிக்க முடியும் என்றும் மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்எக்ஸ் தளம்
Published on

18வது மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்ற நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த மாதம் பதவி ஏற்றது.

இந்த நிலையில், 2024-2025ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். ஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்தார்.

மக்களவைத் தேர்தலுக்கு முன்பு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட சூழலில், தற்போது தேர்தலுக்குப் பிறகு தாக்கல் செய்யும், முதல் முழு பட்ஜெட் இதுவாகும். என்றாலும் இந்த பட்ஜெட்டில், புதிய வருமான வரி விதிப்பு (New Tax Regime) முறையில் வரி விகிதக் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ரூ.3 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் வரி செலுத்த தேவையில்லை என்றும், புதிய வரி சலுகையை தேர்ந்தெடுப்பவர்கள் ரூ.17,500 சேமிக்க முடியும் என்றும் மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ஒருநாள் கிரிக்கெட்டில் 9 ஆண்டு சாதனை முறியடிப்பு...அறிமுகப் போட்டியிலேயே அசத்திய ஸ்காட்லாந்து வீரர்!

நிர்மலா சீதாராமன்
தொடர்ந்து 7வது முறையாக பட்ஜெட் தாக்கல்.. புது சாதனை படைக்கப்போகும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

அதன்படி,

ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 5% வரி விதிக்கப்படும்.

ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருவாய்க்கு 10% வரி விதிக்கப்படும்.

ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான வருவாய்க்கு 15% வரி விதிக்கப்படும்.

ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான வருவாய்க்கு 20% வரி விதிக்கப்படும்.

ரூ.15 லட்சம் மற்றும் அதற்குமேல் 30% வரி விதிக்கப்படும்.

தற்போது புதிய வரி முறையில் செய்யப்பட்டிருக்கும் மாற்றத்தால் ரூ.12 லட்சத்திற்குள் வருமானம் ஈட்டுவோர் ரூ.12,500 வரை வருமான வரியில் சேமிக்க முடியும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தனிநபர்களுக்கான வருமான வரிச் சலுகையாக நிலையான கழிவு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்படுவதாகவும், முதலீட்டாளர்களுக்கான ஏஞ்சல் வரி நடைமுறை ரத்து செய்யப்படுவதாகவும், வருமான வரிக் கணக்கை தாமதமாக தாக்கல் செய்வது இனி குற்றமாக கருதப்படாது என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டின்போது,

ரூ.3 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் வரி செலுத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டது.

ஆனால்,

ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை 5 சதவிகித வரியும்,

ரூ.6 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை 10 சதவிகித வரியும்,

ரூ. 9 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 15 சதவிகித வரியும்,

ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை 20 சதவிகித வரியும்,

ரூ.15 லட்சத்திற்கு மேல் 30 சதவிகித வரியும் விதிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிக்க: பும்ராவுக்கு ஆதரவு! ரோகித், கோலிக்கு ஆப்பு.. Teamஐ தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த கவுதம் கம்பீர்

நிர்மலா சீதாராமன்
“மத்திய பட்ஜெட்டில் இடம்பிடித்துள்ள காங்கிரஸ் வாக்குறுதிகள்” - ப.சிதம்பரம் கருத்து

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com