ஒரு ரூபாய் அடிப்படையில் பட்ஜெட்டில் அரசின் வரவு, செலவுகள் எப்படி இருக்கிறது?

நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அரசின் வரவு, செலவுகள் எப்படி இருக்கிறது...? ஒரு ரூபாய் அடிப்படையில் பார்க்கலாம்.
மத்திய பட்ஜெட் 2024- 2025
மத்திய பட்ஜெட் 2024- 2025 முகநூல்
Published on

அரசின் ஒவ்வொரு ரூபாய்க்கும் என்ன வரவு?

மத்திய அரசின் ஒவ்வொரு ரூபாய் வருவாயிலும் அதிகபட்சமாக கடன் மற்றும் இதர இனங்கள் வாயிலாக 27 காசுகள் கிடைக்கிறது. வருமான வரி மூலம் 19 காசுகள், ஜிஎஸ்டி வரி மூலம் 18 காசுகள், கார்ப்பரேட் வரி மூலம் 17 காசுகள் கிடைக்கிறது. வரி அல்லாத வழிகளில் 9 காசும் கலால் வரி வகையில் 5 காசும் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. சுங்க வரியாக 4 காசுகள் கிடைக்கும் நிலையில் கடன் அல்லாத மூலதன வருவாயாக ஒரு காசு கிடைக்கிறது.

மத்திய பட்ஜெட் 2024-25: அரசின் வரவு - 1 ரூபாயில்!
வரி மூலம் அரசுக்கு கிடைக்கும் வரவு எவ்வளவு?
மத்திய பட்ஜெட் 2024-25: அரசின் வரவு - 1 ரூபாயில்! வரி மூலம் அரசுக்கு கிடைக்கும் வரவு எவ்வளவு?புதிய தலைமுறை

அரசின் ஒவ்வொரு ரூபாயும் எப்படி செலவாகிறது?

மறுபுறம் அரசின் ஒவ்வொரு ரூபாயும் எப்படி செலவாகிறது என்பதை பார்ப்போம். மாநிலங்களுக்கு வரி பங்கு என்ற வகையில் 21 காசுகள் செலவளிக்கப்படுகிறது. கடன்களுக்கான வட்டியாக மட்டும் 19 காசுகள் செலவாகிறது. மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கு 16காசுகள் செலவாகிறது.

மத்திய பட்ஜெட் 2024- 2025
மத்திய பட்ஜெட் 2024 - 2025 | எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு?

நிதிக்குழு, மற்ற செலவுகளுக்கு தலா 9 காசுகள் ஒதுக்கப்படுகிறது. மத்திய அரசு ஆதரவுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள், பாதுகாப்புத்துறை என தலா 8 காசுகள் செலவாகிறது. மானியங்கள் வகையில் 6 காசுகள், ஓய்வூதியம் என்ற வகையில் 4 காசுகள் செலவாகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com