பட்ஜெட் 2021: தனியார்மயமாகிறது 2 பொதுத்துறை வங்கிகள், ஒரு காப்பீட்டு நிறுவனம்!

பட்ஜெட் 2021: தனியார்மயமாகிறது 2 பொதுத்துறை வங்கிகள், ஒரு காப்பீட்டு நிறுவனம்!
பட்ஜெட் 2021: தனியார்மயமாகிறது 2 பொதுத்துறை வங்கிகள், ஒரு காப்பீட்டு நிறுவனம்!
Published on

இரண்டு பொதுத்துறை வங்கிகள், ஒரு காப்பீட்டு நிறுவனம் ஆகியவை தனியார்மயமாக்கப்படவுள்தாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2021-22 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த தசாப்தத்தின் முதல் பட்ஜெட், டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கப்படும் முதல் பட்ஜெட் உள்ளிட்ட சிறப்புகளைப் பெற்ற இந்த பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்:

இரண்டு பொதுத்துறை வங்கிகள், ஒரு காப்பீட்டு நிறுவனம் ஆகியவை தனியார்மயமாக்கப்படவுள்ளன

> காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு 74 சதவீத அளவுக்கு, பாதுகாப்பு விதிகளுடன் அனுமதிக்கப்படுகிறது.

> நிறுவனங்கள் சட்டம் 2013, சிறிய நிறுவனங்களுக்கும் பயனளிக்கும் வகையில் திருத்தியமைக்கப்படவுள்ளது.

> நிதி நிறுவனங்களில் முதலீடு செய்யும் நுகர்வோர் தங்களது உரிமைகளை அறிந்துகொள்ளவும், குறைகளைத் தீர்க்கவும் புதிய அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

> கணினி துறையில் புதிய முன்னேற்றங்களான டேட்டா அனலிட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, இயந்திரவழி கற்றல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

> இரண்டு பொதுத்துறை வங்கிகள், ஒரு காப்பீட்டு நிறுவனம் ஆகியவை தனியார்மயமாக்கப்படவுள்ளன.

> எல்ஐசியின் தகுந்த சட்டத் திருத்தத்தைத் தொடர்ந்து, பங்குகள் வெளியிடப்படவுள்ளன.

> மாநிலங்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது குறித்து முடிவெடுக்கலாம்.

> அரசின் வருவாய் ஈட்டாத சொத்துக்களை கண்டறிந்து அவற்றை வருவாய்க்கு உரியதாக ஆக்க தனி அமைப்பு (SPV) ஏற்படுத்தப்படும்.

> பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் விற்பனை மூலம் வரும் நிதியாண்டில் ரூ.1,75,000 கோடி ரூபாய் திரட்ட திட்டம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com