பட்ஜெட்டில் எந்தெந்த பொருட்களின் விலை உயர்ந்துள்ளது?

பட்ஜெட்டில் எந்தெந்த பொருட்களின் விலை உயர்ந்துள்ளது?
பட்ஜெட்டில் எந்தெந்த பொருட்களின் விலை உயர்ந்துள்ளது?
Published on

பட்ஜெட்டில் எந்தெந்த பொருட்களின் விலை உயர்ந்துள்ளது?


2018-19 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட்டின் படி விலை உயர்வு பெறும் சில பொருட்களின் மீது வரி விதிப்பு மற்றும் சுங்க கட்டணங்களில் மாற்றங்களை அறிவித்துள்ளது. பட்ஜெட் படி, மொபைல் போன்களின் சுங்க வரி 15% முதல் 20% வரை அதிகரித்துள்ளது. கல்வி செஸ் 3% முதல் 4% வரை அதிகரித்துள்ளது.நாட்டுக்கான பட்ஜெட்டை வைத்து தான் வீட்டிற்கான பட்ஜெட்டை தயார் செய்யவார்கள். கடந்த ஆண்டு பட்ஜெட்டை வைத்து நீங்கள் எதாவது பட்ஜெட் தயார் செய்திருந்தால் தயது செய்து கொஞ்சம் கீழே கொடுக்கப்பட்ட தகவல்களை படித்துவிட்டு பின்பு கிளம்புங்கள்.

அருண் ஜேட்லி அறிவித்துள்ள பட்ஜெட்டின் படி எந்தெந்த பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. எந்தெந்த பொருட்களின் விலை குறைந்துள்ளது என பார்ப்போம்,

விலை அதிகரிக்கும் பொருட்கள்: 

 கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள்
 செல்போன்கள் 
 வெள்ளி, 
 தங்கம்,
 காய்கறி, 
 பழச்சாறு,
 வாசனை திரவியங்கள், 
 அழகுசாதன கிரீம்கள், 
 பல் சிகிச்சை பொருட்கள், 
 ஷேவிங் சாதன பொருட்கள்
 ஆபரண கற்கள்,
 வைரம், 
 ஸ்மார்ட் கை கடிகாரங்கள், 
 எல்சிடி, எல்இடி பேனல்கள்
 சன்ஸ்கிரீன், 
 ரேடியல் டயர்ஸ்
 பட்டுத்துணி
 சிகரெட்
 லைட்டர்கள் 
 சமையலுக்கு பயன்படுத்தும் ஆலிவ் மற்றும் கடலை எண்ணெய் விலை உயருகிறது.


பட்ஜெட்டில் விலை குறையும் பொருட்கள்

வறுக்கப்படாத முந்திரிக்கொட்டைகள் 
சோலார் கிளாஸ்கள் 
காதுகேளாதோர் பயன்படுத்தும் கருவிகள் 
பால் ஸ்க்ரூ உள்ளிட்ட பொருட்களின் விலை குறைகிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com