பிட்காயினுக்கு 30% வரி விதிக்கப்படும் எனவும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாகமாநில அரசு ஊழியர்களுக்கு பிஎஃப் வரிச்சலுகை வழங்கப்படும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் 2022-23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து வரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி, திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய 2 ஆண்டுகள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.கூட்டுறவு அமைப்புகளுக்கான குறைந்தபட்ச மாற்று வரி 15% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கு பிஎஃப் வரிச்சலுகை வழங்கப்படும் எனவும், பிட் காயின் போன்ற டிஜிட்டல் சொத்துகள் மூலம் பெறும் வருவாய்க்கு 30% வரி விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.