82% மதிப்பெண் எடுத்தும் தற்கொலை செய்துகொண்ட மாணவர்

82% மதிப்பெண் எடுத்தும் தற்கொலை செய்துகொண்ட மாணவர்
82% மதிப்பெண் எடுத்தும் தற்கொலை செய்துகொண்ட மாணவர்
Published on

பன்னிரெண்டாம் வகுப்பில் 82% மதிப்பெண் எடுத்தும் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

ஹரியானா மாநிலத்தில் கடந்த புதன்கிழமை பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த தேர்வில் மதாந்த் கிராமத்தைச் சேர்ந்த 18 வயது மாணவர் ஒருவர் 82% மதிப்பெண் பெற்று தேர்வாகியுள்ளார். ஆனாலும் தான் எதிர்பார்த்த மதிப்பெண் வரவில்லை என சோகமாகவே இருந்துள்ளார். இந்நிலையில் மனமுடைந்த அந்த மாணவர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மாணவரின் தற்கொலை குறித்து தகவல் தெரிவித்த பரோடா போலீசார், ''மாணவர் தனது அறைக்குள் நுழைந்து உட்புறமாக பூட்டிக்கொண்டுள்ளார். குடும்பத்தினர் தொடர்ந்து கதவை தட்டியும் மாணவர் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இதனால் பயந்துபோன குடும்பத்தினர் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுள்ளனர். அங்கே மாணவர் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். உடனடியாக மாணவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

தற்கொலை செய்துகொண்ட மாணவர் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளார். ஆனால் அவர் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என மனமுடைந்து தற்கொலை செய்திருக்கிறார் என்று தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com