பீகாரில், புரி கன்டாக் ஆற்றைக் கடக்கும் வகையில் ஷஹிபுர் கமல் என்ற இடத்தில் 206 மீட்டர் நீளத்தில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் சாலை கட்டுமானத் துறையின் கீழ் சுமார் 13 கோடி செலவில், பென்குசராயைச் சேர்ந்த மா பக்வத்தி கன்ஸ்ட்ரக்ஷன் 2016-இல் பாலம் அமைக்கும் பணியைத் தொடங்கியது. பாலம் வேலைகள் முற்றிலும் முடிவதற்கு முன்பே, 2017-ல் அப்பகுதி மக்கள் அதை சில பணிகளுக்குப் பயன்படுத்த தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது.