இந்தியச் சீன வீரர்களிடையேயான மோதல் தொடர்பாக வைரல் ஆகும் வீடியோ - உண்மை என்ன?

இந்தியச் சீன வீரர்களிடையேயான மோதல் தொடர்பாக வைரல் ஆகும் வீடியோ - உண்மை என்ன?
இந்தியச் சீன வீரர்களிடையேயான மோதல் தொடர்பாக  வைரல் ஆகும் வீடியோ - உண்மை என்ன?
Published on

சீன வீரர்கள் மற்றும் இந்திய வீரர்கள் எல்லையில் தாக்கிக்கொள்வது போல் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

கடந்த வாரம் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியச் சீன வீரர்களுக்கிடையே மோதல் நடந்தது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் மரணமடைந்தனர். சீனத்தரப்பில் 35க்கும் மேற்ப்பட்ட வீரர்கள் பலியானதாகச் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து எல்லையில் பதற்றம் நிலவி வந்தது. இந்நிலையில், தற்போது இந்தியச் சீன வீரர்கள் ஒருவரையொருவர் மூர்க்கமாகத் தாக்கிக்கொள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அது ஜூன் 15ம் தேதி நடைபெற்ற மோதல் எனக் கூறி பலரும் அதனை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வீடியோவில் முதலில் இருதரப்பு வீரர்களுக்குமிடையே வாக்குவாதம் நடக்கிறது. அந்த வாக்குவாதம் சிறிது நேரத்தில் கைக்கலப்பாக மாறி, பின்னர் இரு வீரர்களும் ஒருவரையொருவர் மூர்க்கமாகத் தாக்கிக் கொள்கின்றனர். அப்போது, இந்திய வீரர்கள் சீன வீரர்களிடம் “ பின்நோக்கிச் செல்லுங்கள்” என்றும் “சண்டையிடாதீர்கள்” என்றும் கூறுகிறார்கள்.

தேதி குறிப்பிடப்படாமல் இருப்பதால்,வீடியோவில் இருப்பது எப்போது நடைபெற்ற மோதல் என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. அதேபோல், மோதல் நடைபெறுவது எந்த இடம் என்பது தெளிவாக தெரியவில்லை. இருப்பினும், மோதலின் போது வீரர்கள் முகக்கவசம் அணிந்திருப்பதால் அது சமீபத்தில் எடுக்கப்பட்ட வீடியோதான் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com