போர்வையே ஸ்ட்ரெட்சர் ! மருத்துவமனையில் கொடுமை

போர்வையே ஸ்ட்ரெட்சர் ! மருத்துவமனையில் கொடுமை
போர்வையே ஸ்ட்ரெட்சர் ! மருத்துவமனையில் கொடுமை
Published on

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் ஸ்ட்ரெட்சர் இல்லாத காரணத்தால் நோயாளியை தரையில் இழுத்துச் சென்ற சம்பவம் நடைப்பெற்றுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கால்முறிவு ஏற்பட்ட பெண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை முடிந்த பின்னர் அந்த பெண்ணை வீட்டுற்கு அனுப்பியுள்ளனர். மருத்துவமனையில் ஸ்ட்ரெட்சர் இல்லாததால் அந்தப்பெண்ணின் உறவினர்கள் இருவர் போர்வையில் அந்தப் பெண்ணை அமரவைத்து இழுத்துச் சென்றுள்ளனர். இந்தக் காட்சிகள் சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

இதுகுறித்து மருத்துவமனையில் கேட்டபோது, மருத்துவமனை ஊழியர்கள் அந்தப்பெண்ணின் உறவினர்களிடம் சிறிது நேரம் காத்திருக்குமாறு தெரிவித்துவிட்டு மற்றோரு நோயாளியை கவனிக்க சென்றுள்ளனர். அதற்குள் அந்தப்பெண்ணில் உறவினர்கள் யாரிடமும் எதுவும் தெரிவிக்காமல் சென்றுவிட்டனர். இந்தவிவகாரம் தொடர்பாக மருத்துவமனை சார்பில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com