கடந்த வாரம் வியாழன் அன்று வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு 80 ரூபாய் 4 பைசா என்ற அளவில் சரிந்து வணிகமானது. இதையடுத்து இன்று நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைவதற்கு காரணம் பற்றி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் உள்ளிட்ட உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு சர்வதேச பொருளாதார நெருக்கடி மற்றும் உக்ரைன் - ரஷ்யா போரே காரணம் என தெரிவித்துள்ளார்.
“உக்ரைன் - ரஷ்யா போர், கச்சா எண்ணெய் விலை ஏற்றம், சர்வதேச அளவில் நிதி நெருக்கடி போன்றவையே ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம். ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது” நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்தார்.