ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களிடம், முக அடையாளத்தையும் பெற ஆதார் ஆணையம் முடிவுசெய்துள்ளது.
வங்கிக் கணக்கு தொடங்குதல், செல்போனுக்கு சிம் கார்டு வாங்குதல் அரசின் மானியங்களை பெறுதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு அத்வாவசிய தேவையாக ஆதார் கார்டு மாறியிருக்கிறது. அனைத்து மாநில மக்களுக்கும் இந்திய அரசின் சார்பில் ஆதார் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஆதார் கார்டை கட்டயாமாக்குவதற்கு எதிரான வழக்குகளும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களிடம், முக அடையாளத்தையும் பெற ஆதார் ஆணையம் முடிவுசெய்துள்ளது.. வரும் ஜூலை 1ம் தேதி முதல் தனிநபர் அடையாள அட்டை ஆணையமான உதய் இந்த வசதியை செய்ததுர உள்ளது. பொதுவாக மக்களுக்கு வழங்கப்படும் ஆதார் அடையாள அட்டையில் 12 இலக்க எண்கள் இருக்கும். அத்தோடு சம்பந்தப்பட்ட நபரில் கைரேகை தொடர்பான விவரங்கள் இடம்பெற்றிருக்கும். இதனிடையே ஆதாரில் உள்ள கைரேகையுடன் பலரது கைரேகைகள் ஒத்துப்போவதில்லை என்ற புகாரும் எழுகிறது. வயதான, கைககளால் கடின வேலைகள் செய்பவர்களுக்கு இந்தப் பிரச்னை வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிப்பவர்களிடம், முக அடையாளத்தையும் பெற ஆதார் ஆணையம் முடிவுசெய்துள்ளது. கைரேகை அங்கீகாரத்தில் பிரச்சனையை எதிர்க்கொள்ளும் முதியவர்களுக்கும், பிறருக்கும் இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.