எரிபொருள் விலை உயர்வு எதிரொலி - ஊபர் கட்டணம் 12% உயர்வு

எரிபொருள் விலை உயர்வு எதிரொலி - ஊபர் கட்டணம் 12% உயர்வு
எரிபொருள் விலை உயர்வு எதிரொலி - ஊபர் கட்டணம் 12% உயர்வு
Published on

வாடகைக் கார் கட்டணத்தை 12 சதவீதம் உயர்த்துவதாக ஊபர் நிறுவனம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த வாடகை கார் சேவை நிறுவனமான ஊபர், இந்தியாவில் சிறப்பான முறையில் சேவை வழங்கி வருகிறது. மற்ற வாடகை கார் சேவை நிறுவனங்களை விட ஊபரின் கட்டணம் சற்று குறைவு என்பதால் இதில் நிறையப் பேர் பயணிக்கின்றனர். இந்த நிலையில், வாடகைக் கட்டணத்தை அதிரடியாக 12 சதவீதம் வரையில் உயர்த்துவதாக ஊபர் நிறுவனம் திடீரென்று அறிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்ற காரணங்களால்தான் இந்த விலை உயர்வு அமல்படுத்தப்படுவதாக காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு முதற்கட்டமாக டெல்லியில் அமலுக்கு வந்துள்ளது. மும்பையில் முன்பே சுமார் 15% வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் சென்னை உள்ளிட்ட மற்ற நகரங்களிலும் டாக்ஸி போக்குவரத்து கட்டணங்கள் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல, ஓலா டாக்ஸி நிறுவனமும் விரைவில் தனது போக்குவரத்துக் கட்டணங்களை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

''வரும் வாரங்களில் எரிபொருள் விலை நகர்வுகளைத் தொடர்ந்து கண்காணித்து, தேவைக்கேற்ப கூடுதல் நடவடிக்கைகளை எடுப்போம்" என்று ஊபர் தலைவர் நிதிஷ் பூஷன் கூறியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை கடந்த மாதம் (மார்ச்) 22-ம் தேதியில் இருந்து தொடர்ந்து ஏற்றத்திலேயே காணப்பட்டு வருகிறது. 18 நாட்களில் 14 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.105.41 ஆகவும், டீசல் விலை ரூ.96.6 ஆகவும் உள்ளது. குருகிராமில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.105.86 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ.97.10 ஆகவும் உள்ளது.

இதையும் படிக்க: 5G அடிப்படை விலையை குறையுங்கள் - TRAI பரிந்துரை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com