சபரிமலையில் முதன்முதலாக 2 பெண்கள் தரிசனம் ?

சபரிமலையில் முதன்முதலாக 2 பெண்கள் தரிசனம் ?
சபரிமலையில் முதன்முதலாக 2 பெண்கள் தரிசனம் ?
Published on

சபரிமலையில் உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பின் முதல் முறையாக இரண்டு பெண்கள் இன்று தரிசனம் நடத்தியுள்ளனர்.

சபரிமலைக்கு வந்த இரண்டு பெண்கள், அதிகாலையில் கோயிலுக்குச் சென்றதால் போராட்டக்காரர்கள் பார்வையில் படவில்லை. ஏற்கனவே கடந்த வாரம் சபரிமலை சென்ற போது போராட்டக்காரர்களால் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பபட்டனர். இந்நிலையில் கனகா, துர்கா ஆகிய இரண்டு பெண்கள்தான் இன்று அதிகாலை 4 மணிக்கு கோயிலுக்குச் சென்றுள்ளனர். சாமி தரிசனம் செய்துள்ளனர். அவர்களுக்கு காவல்துறையினர் முழுப்பாதுகாப்பு அளித்து, அழைத்துச்சென்றுள்ளனர். அவர்கள் பொது வழியில் சென்று தரிசனைம் செய்ததாகவும், அவர்கள் 18 படிகளை ஏறவில்லை என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக் கோரும் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினர். அத்துடன் அங்கு வந்த பெண்களை மலை மீது ஏறவிடாமல் அவர் போராடினர். இதனால் சபரிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு டிசம்பர் 29ஆம் தேதி வரை விதிக்கப்பட்டிருந்தது. அந்த உத்தரவு முடிவடைந்த நிலையில், மீண்டும் சபரிமலை மகரவிளக்கு பூஜைக்காக திறக்கப்பட்டதால் 144 தடை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் சபரிமலை கோயிலில் இரண்டு பெண்கள் சாமி தரிசனம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com