அயோத்தியில் ராம் ஜென்ம பூமி - பாபர் மசூதி விவகாரத்தில் உயர்நீதிமன்றம் சன்னி வக்பு வாரியத்திற்கு அயோத்தியில் மசூதி கட்ட வேறொரு இடத்தை ஒதுக்குமாறு தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில் அயோத்தியில் மசூதி கட்ட ஒதுக்கப்பட்ட நிலத்தில் 5 ஏக்கர் நிலம் எங்களுடையது என டெல்லியை சேர்ந்த ராமா ராணி மற்றும் ராணி கபூர் சகோதரிகள் இருவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். வரும் பிப்ரவரி 8 ஆம் தேதியன்று வழக்கை விசாரிக்க உள்ளது அலகாபாத் உய்ரநீதிமன்றத்தின் லக்னோ கிளை.
இந்த சிக்கல் தீர்வுக்கு வரும் வரையில் அதிகாரிகள் சன்னி வக்பு வாரியத்திற்கு நிலத்தை ஒப்படைப்பதை நிறுத்தி வைக்க வேண்டுமெனவும் சகோதரிகள் மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.
அயோத்தியில் தங்களது தந்தையின் 28 ஏக்கர் நிலத்தில் 5 ஏக்கர் நிலம் இப்போது வக்பு வாரியம் மசூதி கட்ட ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர் சகோதரிகள். வக்பு வாரியத்திற்கு கடந்த 2019 தீர்ப்பின் படி நிலத்தை ஒதுக்கி தந்தவர் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்.