உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவின் பாரி சவுக் என்ற பகுதியில், ரோஷினி என்ற கர்ப்பிணி தனது கணவர் பிரசாந்த் சர்மாவுடன் சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்துள்ளார்.
அப்போது திடீரென கர்ப்பிணி ரோஷினிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. செய்வதறியாது நின்ற அவரின் கணவர் பிரசாந்த், அருகில் இருந்தவர்களிடம் உதவி கேட்டுள்ளார். அப்போது அவ்வழியே வந்த செவிலியர்கள் ரேணுதேவி, ஜோதி எனும் இருவர் ரோஷினிக்கு உதவ முன்வந்துள்ளனர். இதனடையடுத்து சாலையிலேயே கர்ப்பிணியை சுற்றி துணிகளை வைத்து மறைத்து பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது அவ்வழியே வந்த இன்னும் சில பெண்களும் அவர்களுக்கு உதவியுள்ளனர்.
இந்நிலையில், மிகுந்த போராட்டத்திற்கு பிறகு கர்ப்பிணிக்கு சுகப்பிரசவத்தின் மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த செவிலியர்கள் பணிபுரியும் சாரதா மருத்துவமனையிலேயே தாய், சேய் என இருவரையும் கிசிக்கைக்காக அனுமதித்துள்ளனர்.
இதனை அறிந்த மருத்துவ நிர்வாகம் கர்ப்பிணியின் உயிரை தக்க சமயம் காப்பாற்றியதற்காக தேவி, ஜோதி ஆகிய இருவருக்கும் தலா ரூ. 51,000 வெகுமதியாக அளித்து, பாராட்டுகளை தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தினை தொடர்ந்து, தற்போது கர்ப்பிணியை உயிரை காப்பாற்றிய செவிலியர்கள் இருவருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.