படைப்பாற்றல்மிக்க நகரங்கள்.. UNESCO பட்டியலில் இடம்பெற்ற 2 இந்திய நகரங்கள்.. எவை தெரியுமா?

கோழிக்கோடு, குவாலியர் ஆகிய நகரங்களை, படைப்பாற்றல் மிக்க நகரங்களாக யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது.
படைப்பாற்றல்மிக்க நகரங்கள்
படைப்பாற்றல்மிக்க நகரங்கள் முகநூல்
Published on

கோழிக்கோடு, குவாலியர் ஆகிய நகரங்களை, படைப்பாற்றல் மிக்க நகரங்களாக யுனெஸ்கோ அங்கீகரித்துள்ளது. உலக நகரங்கள் தினத்தையொட்டி, படைப்பாற்றல்மிக்க நகரங்களாக 55 நகரங்களை தேர்வு செய்து அதற்கான பட்டியலை யுனெஸ்கோ அமைப்பு வெளியிட்டுள்ளது.

கோழிக்கோடு, குவாலியர்
கோழிக்கோடு, குவாலியர்முகநூல்

இதில், இந்தியாவில் கேரள மாநிலத்தின் கோழிக்கோடு மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தின் குவாலியர் ஆகிய இரு நகரங்களும் இடம்பெற்றுள்ளன. இலக்கிய திருவிழா, புத்தக திருவிழா என பல நிகழ்ச்சிகள் நடக்கும் கோழிக்கோடு நகரம், இலக்கிய நகரமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல், பல்வேறு புகழ்பெற்ற பாடகர்களை உருவாக்கியுள்ள குவாலியர் நகரத்தை, இசை நகரமாக யுனெஸ்கோ அமைப்பு அங்கீகரித்துள்ளது.

இந்திய நகரங்களை யுனெஸ்கோ அமைப்பு அங்கீகரித்துள்ளதற்கு, இரு நகரங்களை சேர்ந்த மக்களுக்கும்ட் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.மேலும் பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com