இவர்கள் ஏற்கனவே இந்தக் கூலித்தொழிலாளர்களின் உணவு தேவையை போக்குவதற்காக ‘சமூக சமையலறை கூடங்களை’ ஏற்படுத்தி அதில் உணவு தயாரித்து வழங்கி வருகின்றனர். இது குறித்து தாஜமுல் பாஷா, "எங்களது பெற்றோர் சீக்கிரமே இறந்துவிட்டார்கள். நாங்கள் கோலாரில் உள்ள எங்கள் தாய்வழி பாட்டி இடத்திற்குக் குடிபெயர்ந்தபோது, இங்குள்ள இந்து, முஸ்லிம், சீக்கியர் என எந்த மத வேறுபாடுகளும் இல்லாமல் நாங்கள் வாழ இவர்கள்தான் உதவினர்” என்று கூறியுள்ளார்.
இந்தப் பாஷா சகோதரர்கள் வாழை சாகுபடி மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் தொழில் செய்து வருகின்றனர். தாஜம்முல் பெற்றோரை இழந்தபோது அவருக்கு ஐந்து வயது. அவரது உடன்பிறப்புக்கு மூன்று வயது. ஆகவே இவர்கள் சிக்பாலப்பூரிலிருந்து தங்கள் பாட்டி வசித்து வந்த கோலாருக்கு இடம்பெற வேண்டியிருந்தது. அன்று தாய், தந்தையரை இழந்து இந்த ஊருக்கு வந்த இவர்கள் இருவரும் இன்று தொழிலதிபர்களாக உள்ளனர்.