ரயிலில் பயணம் செய்த தன் தாயை தொடர்புகொள்ள முடியவில்லை என ட்வீட் செய்த மகனுக்கு ரயில்வே உடனடியாக உதவி செய்துள்ளது
சாஷ்வாத் என்பவர் ரயில்வே துறையின் ட்விட்டர் கணக்கையும், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ட்விட்டர் கணக்கையும் டேக் செய்து ஒரு உதவியை கோரினார். அதில், அஜ்மிர் - ஷெல்டா எக்ஸ்பிரஸ் ரயிலில் என்னுடைய அம்மா பயணம் செய்கிறார். என்னால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஏதேனும் உதவி செய்ய முடியுமா என கோரியுள்ளார். உடனடியாக ட்விட்டரின் பதில் அளித்த ரயில்வே, சாஷ்வாத்தின் தாய் பயணம் குறித்த தகவல்களைக் கேட்டது. பின்னர் உங்கள் கோரிக்கை தகுந்த அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது. சிறிது நேரம் கழித்து மற்றொரு ட்வீட் செய்த சாஷ்வாத், உங்களது உடனடி நடவடிக்கைக்கு நன்றி. உங்கள் உதவிக்கு நான் கடமைப்பட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்
இந்த சம்பவம் குறித்து ட்வீட் செய்துள்ள ரயில்வே துறை, ''இந்திய ரயில்வே துறை பயணிகளை பாதுகாப்பாக உணர வைக்கிறது. தன் தாயை தொடர்புகொள்ள முடியவில்லை மகன் ஒருவர் கோரிக்கை விடுத்தார். ரயில்வே உடனடியாக நடவடிக்கை எடுத்து மகனிடம் தாயை தொடர்புகொள்ள உதவி செய்தது’’ என குறிப்பிட்டுள்ளது
சமூக வலைதளங்களில் கோரப்படும் கோரிக்கைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கும் ரயில்வே துறைக்கு இணையவாசிகள் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்