இந்த நிலையில், இந்திய துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடுவின் தனிப்பட்ட கணக்கிற்கு வழங்கப்பட்டிருந்த 'ப்ளு டிக்' வசதியை ட்விட்டர் நிறுவனம் திடீரென்று நீக்கியது. 13 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடரும் வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் கணக்கில் இருந்த 'ப்ளு டிக்' நீக்கப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இதனால் இவ்விவகாரம் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது.