15 நாட்களில் ஆஜராக ட்விட்டர் சிஇஓவிற்கு சம்மன்

15 நாட்களில் ஆஜராக ட்விட்டர் சிஇஓவிற்கு சம்மன்
15 நாட்களில் ஆஜராக ட்விட்டர் சிஇஓவிற்கு சம்மன்
Published on

நாடாளுமன்றத்தின் நிலைக்குழுவின் முன் 15 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் என்று ட்விட்டர் சிஇஓவிற்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயன்பாட்டாளர்கள் உள்ளனர். கட்டுப்பாடு இல்லாமல் இயங்கிக் கொண்டிருக்கும் இந்தச் சமூக ஊடங்களில், போலியான படங்கள், வீடியோ, செய்திகள் உள்ளிட்டவை நாள்தோறும் பரவுகின்றன. அதுபோன்ற தவறான தகவல்களை தடுப்பது சவால் நிறைந்ததாக இருக்கிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிய செய்திகள் நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் வெளிவந்த வண்ணம் உள்ளன. 

சமூக வலைத்தளங்களில் வரும் செய்திகள், தகவல்களை உண்மையென நம்புவோரின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் ஊடுருவியிருக்கும் போலிகளின் செயல்பாடு அதிகரித்து இருக்கிறது. எனவே மக்களிடத்தில் சரியான விஷயங்கள் செல்வது அவசியமாகிறது. இதற்காக தவறான தகவல்களை ஆராய்ந்து, அவற்றின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்த சம்பந்தப்பட்ட சமூக வலைத்தளங்களின் உதவியை மத்திய அரசு நாடி வருகிறது. 


               
வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இதுதொடர்பாக பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் தலைமையிலான நாடாளுமன்ற கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி நடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி ட்விட்டர் நிர்வாகத்திற்கு சம்மன் ஒன்றினை அனுப்பி இருந்தது. அந்த சம்மனில், சமூக வலைத்தள ஊடகங்களில் நிலவும் பிரச்னைகள் குறித்து கலந்துரையாட பிப்ரவரி 7ம் தேதி நடைபெறும் கூட்டத்திற்கு வருமாறு ட்விட்டர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பின்னர், அந்தக் கூட்டம் பிப்ரவரி 11ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற நாடாளுமன்றக் குழு கூட்டத்தின் முன் ட்விட்டர் அதிகாரிகள் ஆஜராகவில்லை. 

இதனால் பாஜக எம்.பி அனுராக் தாக்கூர் தலைமையிலான நாடாளுமன்றக் குழு ஒரு தீரமானத்தை நிறைவேற்றிவுள்ளது. ட்விட்டர் அதிகாரிகள் இந்தக் குழுவின் முன் 15 நாட்களுக்குள் ஆஜராக வேண்டும் என்ற தீரமானத்தை  நிறைவேற்றியிருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், தேர்தலில் சமூகவளைத்தளங்களின்  தாக்கம் குறித்து விவாதிக்க ட்விட்டர் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. மேலும் தேர்தல் ஆணையமும் சமூக வளைத்தளங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com