மும்பையில் தொழிலாளர்கள் போராட்டம் குறித்து தவறான தகவல் பரப்பியதாக தனியார் தொலைக்காட்சி நிருபர் கைது செய்யப்பட்டார்.
இந்தியாவில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவதை தடுப்பதற்காக மார்ச் 25 ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை முதல் கட்டமாக அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனாவின் வீரியம் குறையாததால் அடுத்தக்கட்டமாக மே 3 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் என பிரதமர் மோடி நேற்று அறிவித்தார்.
வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்காக பாந்த்ரா ரயில் நிலையம் அருகே திரண்டனர். அங்கு அவர்கள் போராட்டம் நடத்தியதால் காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இந்நிலையில், அந்த போராட்டத்தின்போது தவறான தகவல் பரப்பியதாக, அதாவது ரயில் போக்குவரத்து தொடங்கியது என கூறியதால் தனியார் தொலைக்காட்சி நிருபர் ராகுல் குல்கர்னியை கைது செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.