குஜராத்தில் சபர்மதி ஆஸ்ரம மறுசீரமைப்புத் திட்டத்தை எதிர்த்து அம்மாநில உயர் நீதிமன்றத்தில், மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.
அகமதாபாத்தில் உள்ள மகாத்மா காந்தி தங்கியிருந்த சபர்மதி ஆஸ்ரமத்தை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத்தலமாக மேம்படுத்த குஜராத் அரசு திட்டமிட்டுள்ளது. சபர்மதி ஆஸ்ரமம் அருகிலுள்ள 48 பாரம்பரிய சொத்துகளையும் ஒன்றிணைக்க திட்டம் வகுக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு எதிராக குஜராத் உயர் நீதிமன்றத்தில் துஷார் காந்தி தாக்கல் செய்துள்ள மனுவில், 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காந்தி ஆஸ்ரம நினைவு மற்றும் சுற்றுப்புற மேம்பாட்டுத் திட்டமானது, மகாத்மாவின் விருப்பத்திற்கும் தத்துவத்திற்கும் எதிரானது என்று குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, தீபாவளி விடுமுறைக்குப் பின்னர் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.