ஓடும் டிரைனிலிருந்து பெண்ணை தள்ளிவிட்ட TTE; ஜென்ரல் டிக்கெட் எடுத்து ஏசி கோச்சில் ஏறியதால் விபரீதம்

ரயிலில் வசதியாக பயணம் செய்யவேண்டுமென்றால் கன்பார்ம் கோச்சில் பயணிகள் தங்ககளுக்கான முன்பதிவு சீட்டை பெற்று பயணத்தை மேற்கொள்ளுவர்.
டிக்கெட் பரிசோதகரால் கீழே தள்ளிவிடப்பட்ட பெண்
டிக்கெட் பரிசோதகரால் கீழே தள்ளிவிடப்பட்ட பெண்PT
Published on

ரயிலில் வசதியாக பயணம் செய்யவேண்டுமென்றால் கன்பார்ம் கோச்சில் பயணிகள் தங்ககளுக்கான முன்பதிவு சீட்டை பெற்று பயணத்தை மேற்கொள்ளுவர். ஆனால் திடீரென்று எதிர்பாராவிதமாக பயணம் செய்யவேண்டுமென்றால் ரயிலில் கன்பார்ம் கோச்சில் சீட் கிடைப்பது கடினம். எனவே ஓபன் டிக்கெட் எடுத்து அன்ரிசர்வ்டு கம்பார்ட்மெண்டில் பயணம் மேற்கொள்ள வேண்டும்.

அன்ரிசர்வ்டு கம்பார்ட்மெண்டில் கூட்ட நெரிசல் இருப்பதுடன், பல அசௌரியங்களும் இருக்கிறது. இதிலிருந்து தப்பிப்பதற்காக சில பயணிகள் ஓபன் டிக்கெட் எடுத்து, டிக்கெட் பரிசோதகருக்கு தெரியாமல் ஏமாற்றி கன்பார்ம் கோச்சில் பயணம் செய்வர். டிக்கெட் பரிசோதகர் அவர்களுக்கு அபராதம் விதிப்பதுடன் அவர்களை அன்ரிசர்வ்டு கம்பார்ட்மெண்டில் பயணம் மேற்கொள்ள வலியுறுத்தலாம். மாறாக பயணிகளை ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிடுவது என்பது குற்றமான செயலாகும்.

டிக்கெட் பரிசோதகரால் கீழே தள்ளிவிடப்பட்ட பெண்
Women's Day 2024 | கல்பனா சாவ்லா முதல் ஹெலன் ஷர்மன் வரை... விண்வெளியில் கால்பதித்த 5 சாதனை மகளிர்!

இதே போன்று ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் ஜெனரல் டிக்கெட் வாங்கி ஏசி கோச்சில் ஏறிய ஒரு பெண்ணை டிடிஇ வெளியே தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஹரியானா மாநிலத்தில், ஃபரிதாபாத் நகரில் இருந்து ஜீலம் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று புறப்பட்டு உள்ளது. இப்பெட்டியின் ஏசி கோச் ஒன்றில் பாவ்னா என்ற 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், தனது உடமைகளுடன் ஏறி பயணம் செய்து வந்துள்ளார். இவர் ஃப்ரிதாபாத்தில் உள்ள எஸ்ஜிஜேஎம் நகரில் வசிப்பவர் என்றும் ஜான்ஸியில் நடந்த ஒரு திருமணவிழாவிற்காக சென்றதாக கூறப்படுகிறது.

முன்னதாக பாவ்னா, முன்பதிவு டிக்கெட் கிடைக்காததால் ஜெனரல் டிக்கெட் எடுத்து இருக்கிறார். அன்ரிசர்வ்டு கம்பார்ட்மெண்ட் போவதற்கு முன்னதாக ரயில் புறப்பட இருந்ததால், அவசர அவசரமாக ஏசி கோச் ஒன்றில் ஏறி இருக்கிறார். தவறான கோச்சில் பாவ்னா ஏறியதை பார்த்த டிக்கெட் பரிசோதகர், பாவ்னாவிடம், உடனடியாக ரயிலை விட்டு கீழே இறங்கி அன்ரிசர்வ்டு கம்பார்ட்மெண்டில் பயணிக்குமாறு சொல்லியிருக்கிறார்.

அதற்கு பாவ்னாவும், அடுத்த ஸ்டேஷனில் இறங்கி போவதாகவும், தேவைப்பட்டால் இதற்கான அபராதத்தை செலுத்துவதாகவும் டிக்கெட் பரிசோதகரிடம் கூறியுள்ளார். இருப்பினும் டிக்கெட் பரிசோதகர் பாவ்னா பேச்சை கேட்க மறுத்ததுடன், பாவ்னா உடமைகளை தூக்கி வெளியே எறிந்ததுடன் நிற்காமல் பாவ்னாவை பிடித்து வெளியே தள்ளியும் விட்டுள்ளார். இதில் நிலைதடுமாறிய பாவ்னா ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கி கொண்டிருக்கிறார். பயணிகள் உடனடியாக அவசர சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிப்பாட்டி இருக்கின்றனர்.

இருப்பினும் கீழே விழுந்த பவ்னாவின் பின் தலை கை கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. ஆபத்தான நிலையில் பாவ்னா மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் தப்பியோடிய டிக்கெட் பரிசோதகரை போலிசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com