இந்தியா வந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்: உடன் வந்தவர்கள் யார் யார்?

இந்தியா வந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்: உடன் வந்தவர்கள் யார் யார்?
இந்தியா வந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்: உடன் வந்தவர்கள் யார் யார்?
Published on

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். இந்தியாவுக்கு வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்‌ நேரடியாக குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு வந்திறங்கினார். விமான நிலையத்திலிருந்து சபர்மதி ஆசிரமம் வரை, லட்சக்கணக்கானோர் பங்கேற்று பிரமாண்ட வரவேற்பு அளிக்கின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் வரும் குடும்ப உறுப்பினர்கள், அமெரிக்க பிரதிநிதிகள் யார் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மெலனியா - ட்ரம்ப்பின் மனைவி

இவான்கா ட்ரம்ப் - ட்ரம்ப்பின் மகள்

ஜேரெட் குஸ்னர் - ட்ரம்ப்பின் மருமகன்

ராபர்ட் ஓ பிரையன் - பாதுகாப்பு ஆலோசகர்

வில்பர் ரோஸ் - வர்த்தக அமைச்சர்

கென்னித் ஜஸ்டர் - இந்திய தூதர்

டான் ப்ரோய்லீ - எரிசக்தித் துறை அமைச்சர்

மைக் முல்வானே - வெள்ளை மாளிகை பணியாளர்களின் தலைமை தலைவர்

ஸ்டீபன் மில்லர் - மூத்த ஆலோசகர்

டான் ஸ்காவினோ - சமூக வலைதள இயக்குநர்

லின்ட்சே ரெனால்ட்ஸ் - மெலனியா ட்ரம்ப் அலுவலக மூத்த அதிகாரி

ராபர்ட் ப்ளார் - வெள்ளை மாளிகை ஆலோசகர்

ஸ்டெபானிக் கிரிஸ்ஹம் - செய்தி தொடர்புத்துறை அமைச்சர்

ஆடம் எஸ்.போஹ்லர் - சர்வதேச வளர்ச்சி நிதிநிறுவன தலைமை தலைவர்

அஜித் பை - தகவல் தொடர்புத்துறை தலைவர்

லிசா கர்டிஸ் - பாதுகாப்பு கவுன்சிலின் மூத்த இயக்குநர்

காஸ்யப் படேல் - முன்னாள் பாதுகாப்பு கவுன்சிலின் மூத்த ஆலோசகர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com