காந்தி டூ மோடி ... சபர்மதி ஆசிரமத்தின் வரலாற்றுச் சிறப்பு என்ன?

காந்தி டூ மோடி ... சபர்மதி ஆசிரமத்தின் வரலாற்றுச் சிறப்பு என்ன?
காந்தி டூ மோடி ... சபர்மதி ஆசிரமத்தின் வரலாற்றுச் சிறப்பு என்ன?
Published on

இந்தியாவில் காந்தியின் முதல் ஆசிரமம் 1915-ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி அன்று அகமதாபாத்தின் கோச்ராப் பகுதியில் நிறுவப்பட்டது. இந்த ஆசிரமம் பின்னர் 1917ம் ஆண்டு ஜூன் 17ம் தேதி சபர்மதி ஆற்றின் கரையில் உள்ள ஒரு திறந்த நிலத்திற்கு மாற்றப்பட்டது.

அதற்கு காரணம், அவர் வாழ்வில் சில பரிசோதனைகளை செய்ய விரும்பினார். அதாவது, விவசாயம், கால்நடை வளர்ப்பு, பசு வளர்ப்பு தொடர்புடைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்காக அவர் இந்த வகையான தரிசு நிலத்தைத் தேடிக்கொண்டிருந்தார். இந்த ஆசிரமத்தில் மகாத்மா காந்தி 1917ம் ஆண்டு முதல் 1930ம் ஆண்டு வரை என சுமார் 13 ஆண்டுகள் தங்கியிருந்தார். சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட தண்டி யாத்திரை எனப்படும் உப்பு சத்தியாகிரகம் சபர்மதி ஆசிரமத்தில்தான் தொடங்கியது. இந்த இடம்தான் இந்திய சுதந்திர போராட்டத்தின் மையமாக திகழ்ந்தது. மகாத்மா காந்தியை பெரும் சக்திவாய்ந்த தலைவராக உருவாக்கியதில் சபர்மதி ஆசிரமத்திற்கு பெரும் பங்குண்டு.

ஆசிரமத்தில் இருந்தபோது, காந்தி கைமுறை உழைப்பு, விவசாயம் மற்றும் கல்வியறிவு ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஒரு பள்ளியை உருவாக்கினார். 1930ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி காந்தி இங்கிருந்துதான் உப்பு சத்தியாகிரகத்தை தொடங்கினார். அப்போது, இந்தியா சுதந்திரம் பெறும் வரை ஆசிரமத்திற்கு திரும்ப மாட்டேன் என்று அவர் சபதம் செய்தார். 1933 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி ஆசிரமத்தை கலைக்க காந்தி முடிவு செய்திருந்தார், பின்னர் பல சுதந்திர போராளிகள் தடுத்து வைத்த பின்னர் உறுதிப்படுத்தப்பட்ட இடமாக மாறியது, பின்னர் சில உள்ளூர் குடிமக்கள் அதைப் பாதுகாக்க முடிவு செய்தனர். 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியா சுதந்திரம் பெற்றும் அவர் ஆசிரம் திரும்பவில்லை. பின்னர், 1948ஆம் ஆண்டு காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

பல ஆண்டுகளாக, ஆசிரமம் இந்தியாவை விடுவிக்கும் சித்தாந்தத்தின் தாயகமாக திகழ்ந்தது. ஒடுக்குமுறை சக்திகளுக்கு எதிரான தங்கள் சொந்த போர்களில் எண்ணற்ற பிற நாடுகளுக்கும் மக்களுக்கும் இது உதவியது. இன்று, ஆசிரமம் உத்வேகம் மற்றும் வழிகாட்டுதலின் ஆதாரமாக செயல்படுகிறது, மேலும் காந்தியின் வாழ்க்கைப் பணிக்கான நினைவுச்சின்னமாகவும், இதேபோன்ற போராட்டத்தை நடத்திய மற்றவர்களுக்கு ஒரு சான்றாகவும் நிற்கிறது.

உலகத் தலைவர்கள் வருகையின்போது சபர்மதி ஆசிரமத்தின் சிறப்புகளை எடுத்துரைக்க அவர்களை அங்கு அழைத்துச்செல்வது பிரதமர் மோடியின் வழக்கம். இந்நிலையில், இந்தியாவரும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட உள்ளார்.

ட்ரம்ப்பிற்கு கைவினை பொருட்களை அன்புப் பரிசாக சபர்மதி ஆசிரம நிர்வாகம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. புனே எரவாடா சிறையிலிருந்த போது காந்தி பயன்படுத்திய ராட்டை சமர்பதி ஆசிரமத்தில் இருப்பது சிறப்பு வாய்ந்தது. இதற்கு முன், சீன அதிபர் ஷி ஜிங்பிங், ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாவு. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை தந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com