சபர்மதி ஆசிரமத்தின் விருந்தினர் பதிவேட்டில் ட்ரம்ப் எழுதியது என்ன?

சபர்மதி ஆசிரமத்தின் விருந்தினர் பதிவேட்டில் ட்ரம்ப் எழுதியது என்ன?
சபர்மதி ஆசிரமத்தின் விருந்தினர் பதிவேட்டில் ட்ரம்ப் எழுதியது என்ன?
Published on

காந்தியின் நினைவலைகளை தாங்கி நிற்கும் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அங்குள்ள விருந்தினர் பதிவேட்டில் தனது கைப்பட எழுதினார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப், மகள் இவான்கா ட்ரம்ப் ஆகியோரும் வந்துள்ளனர். பகல் 11.40 மணியளவில் அகமதாபாத் விமானநிலையம் வந்த ட்ரம்ப்பை இந்திய பிரதமர் மோடி ஆரத்தழுவி வரவேற்றார். மேலும் அவரது மனைவி மற்றும் மகளை கைக்குலுக்கியும் வரவேற்றார். இதையடுத்து அங்கிருந்து ட்ரம்ப்பும், மெலனியாவும் காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை தந்தனர்.

அங்கு காந்தியின் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்திய ட்ரம்ப், காந்தி சுற்றிய ராட்டையை சுற்றிப்பார்த்து மகிழ்ந்தார். பின்னர், அங்கிருந்து கிளம்பும் முன், ஆசிரமத்தில் இருந்த விருந்தினர் பதிவேட்டில் தன்னுடைய கருத்துகளை ட்ரம்ப் பதிவு செய்து கையெழுத்திட்டார்.

அதில், “இந்த அற்புதமான பயணத்திற்கு ஏற்பாடுகளை செய்த இனிய நண்பர், பிரதமர் மோடிக்கு நன்றி” என எழுதியுள்ளார். மெலனியாவும் அதற்கு கீழே கையெழுத்திட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com