செல்போனில் அழைப்பவரின் அடையாளத்தை அறிந்துகொள்ள உதவும் ட்ரூ காலர் செயலி தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயன்பாட்டாளர்களை தன்னிச்சையாக UPI வங்கி பணப்பரிமாற்றச் சேவையில் இணைத்ததால், ஹேக் செய்யப்பட்டு விட்டதாக நாடு முழுவது பரபரப்பு ஏற்பட்டது.
ட்ரூ காலர் செயலியை பயன்படுத்தி UPI வங்கி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் வசதி சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் ட்ரூ காலர் செயலிக்கு ஒரு அப்டேட் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து பயனாளர்கள் தன்னிச்சையாக யுபிஐ வங்கி பணப்பரிமாற்ற சேவையில் இணைக்கப்பட்டு, அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது.
இதனால், மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்ட நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தத் தவறு நேர்ந்ததாக ட்ரூ காலர் நிறுவனம் விளக்கம் அளித்தது. இதனால் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குளறுபடி உள்ள வெர்ஷனை நீக்கி விட்டதாக தெரிவித்துள்ள ட்ரூ காலர் நிறுவனம், ஏற்கனவே பாதிக்கப்பட்டு விட்டவர்களுக்கு மாற்று செயலி விரைவில் வழங்கப்படும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.