குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக முப்படை மற்றும் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஹெலிகாப்டர் மரத்தில் மோதி விழுந்ததாக கூறப்படும் நிலையில், ஹெலிகாப்டர் பறந்து வந்த உயரம், மரத்தின் உயரம் ஆகியவை குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. மேலும் ட்ரோன் உதவியுடன் அப்பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவையும் அதிகாரிகள் ஆய்வுசெய்து வருகின்றனர். விபத்து நடந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வசிப்பவர்கள் யார் யார் என்பது குறித்த விவரங்களையும் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பகுதியில் பூட்டிக் கிடந்த காட்டேஜ் குறித்தும், அண்மையில் அந்த காட்டேஜ்ஜில் தங்கி சென்றவர்களின் விவரங்களையும் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள செல்போன் டவர்களில் அன்றைய தினம் பதிவான தொலைபேசி எண்களை சேகரித்து விசாரிக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.