இயல்பு நிலையிலிருந்து 3 மடங்கு தலை வீங்கிய 5 வயதான திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி மரணமடைந்தார்.
திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி ரோனா பேகம், ஹைட்ரோசெஃபாலுஸ் (hydrocephalus) என்ற பிரச்னையால் பாதிக்கப்பட்டார். இதனால் அந்தப் பெண்ணின் தலை 94 செ.மீ. (37 இன்ச்) வீக்கம் அடைந்தது. இதனால் அச்சிறுமியின் தலையின் பாரம் தாங்க முடியவில்லை. சரியாக மூச்சுவிடவும் முடியவில்லை. 2013 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள நியூ மருத்துவமனையில் மருத்துவம் பார்க்கப்பட்டது. ஆனாலும் அவருடைய பிரச்னையை சரி செய்ய முடியவில்லை. விரைவில் அறுவை சிகிச்சை செய்யப்பட இருந்த அந்தப்பெண் திடீரென மரணம் அடைந்தார்.