மக்களவையை அதிரச் செய்த மஹூவா மோத்ரா ! யார் இவர் ?

மக்களவையை அதிரச் செய்த மஹூவா மோத்ரா ! யார் இவர் ?
மக்களவையை அதிரச் செய்த மஹூவா மோத்ரா ! யார் இவர் ?
Published on

மேற்கு வங்க திரிணாமுல் எம்பி மஹூவா மோத்ரா மக்களவையில் பேசிய கன்னி பேச்சு வைரலாகி வருகிறது. 

நாடாளுமன்றத்தில் கடந்த செவ்வாய்கிழமை குடியரசு தலைவர் உரையின் மீதான விவாததின் போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹூவா மோத்திரா ஆக்ரோஷமாக பேசினார். இவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் அனைவராலும் பாராட்டப் பட்டுவருகின்றது. இந்நிலையில் இவரது பின்னணி குறித்து தெரிந்துகொள்ளலாம்.

மஹூவா மோத்திரா அமெரிக்காவிலுள்ள மாஸ்சாச்சுசட்ஸ் மவுண்ட் ஹொலியோக் கல்லூரில் பட்டப்படிப்பை முடித்தார். இவர் கணிதம் மற்றும் பொருளாதார பிரிவில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். இதன்பிறகு ஜெ.பி.மோர்கன் என்ற முதலீடு நிறுவனத்தில் மோத்திரா பணியாற்றி வந்தார். 2009ஆம் ஆண்டு இந்த பணியை விட்டு இவர் அரசியலில் இறங்கினார். 

முதலில் மேற்கு வங்க மாநிலத்தின் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அதன்பிறகு 2010ஆம் ஆண்டு கட்சி மாறி திரிணாமுல் கட்சியில் இணைந்தார். அங்கு இவர் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராக பதவி வகித்து பல தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று வந்தார்.  கடந்த வருடம் அசாம் மாநிலத்தில் திரிணாமுல் எம்பிக்கள் நுழையக் கூடாது என்று தடுத்து நிறுத்தப்பட்டப் போது இவர் சில காவலர்களை தாக்கியதாக சர்ச்சையில் சிக்கினார். அப்போது திரிணாமுல் கட்சியினர் அசாம் மாநிலத்திற்குள் நுழைந்தால் அங்கு பிரச்னை அதிகமாகும் என்று அம்மாநில காவல்துறை டிஜிபி தெரிவித்திருந்தார். 

இதனையடுத்து தற்போது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கிருஷ்ணா நகர் தொகுதியில் இவர் போட்டியிட்டார். இந்தத் தொகுதியில் இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கல்யாண் சௌபேவைவிட 60ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார்.  

கடந்த செவ்வாய்கிழமை மக்களவையில் இவர் தனது கன்னிப் பேச்சில், “இந்த நாடு மிகவும் ஆபத்தான பாதையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இந்திய நாட்டில் பாஸிசம் தலையோங்க தொடங்கியுள்ளது. இதற்கு அவர் 7 உதாரணங்களை முன்னெடுத்து வைத்தார். அமைச்சர்கள் தங்களின் பட்டப்படிப்பிற்கான ஆதாரத்தை காட்ட முடியாத நாட்டில் நீங்கள் எப்படி வறுமையிலுள்ள மக்கள், தாங்கள் இந்நாட்டை சேர்ந்தவர் என்ற ஆதாரம் கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அத்துடன் ராணுவத்தின் சாதனைகளை ஒரு தனி நபர் எடுத்துக்கொள்வது தற்போது தான்” என்று உணர்ச்சி பொங்க பேசினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com