பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்: மேற்குவங்க  அரசியல் சதுரங்கம்

பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்: மேற்குவங்க  அரசியல் சதுரங்கம்
பதவியை ராஜினாமா செய்த அமைச்சர்: மேற்குவங்க  அரசியல் சதுரங்கம்
Published on

மேற்குவங்கத்தை சேர்ந்த மம்தா பானர்ஜியின் அமைச்சரவையை சேர்ந்த அமைச்சர் ராஜிப் பானர்ஜி, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கிடைத்த இன்னொரு அதிர்ச்சியாக, திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர் ராஜீப் பானர்ஜி, தனது வனத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜீப் பானர்ஜி ஹவுராவில் உள்ள டோம்ஜூர் தொகுதியை சேர்ந்த டி.எம்.சி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.

ராஜீப் முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் "அமைச்சரவையில் வனத்துறை அமைச்சர் பொறுப்பில் இருப்பதால் நான் எனது பதவியை ராஜினாமா செய்வதை இதன்மூலம் தெரிவிக்கிறேன். மேற்கு வங்க மக்களுக்கு சேவை செய்வது ஒரு பெரிய மரியாதை மற்றும் பாக்கியம். இந்த வாய்ப்பைப் பெற்றமைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது ராஜினாமாவை தயவுசெய்து ஏற்றுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜனவரி 30, 31 தேதிகளில், அமித் ஷா மேற்கு வங்கத்திற்கு வருகை தருவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக இவர் ராஜினாமா செய்துள்ளார். அமித் ஷா கடந்த முறை மேற்கு வங்கத்துக்கு வருகை தந்தபோது, நந்திகிராம் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸின் முக்கிய தலைவர் சுவேந்து ஆதிகாரி, பாஜகவில் சேர்ந்தார். ஆதிகாரி பதவி விலகியதைத் தொடர்ந்து, ஐந்து எம்.எல்.ஏக்கள் மற்றும் ஒரு எம்.பி. உட்பட 34 திரிணாமுல் தலைவர்கள் பாஜகவுக்கு மாறினர்.

திரிணாமுல் மட்டுமின்றி இடது மற்றும் காங்கிரஸ் தலைவர்களும் சமீபத்தில் பாஜகவுடன் இணைந்துள்ளனர். திரிணாமுல் காங்கிரஸின் 15 எம்.எல்.ஏக்கள் மற்றும்  ஒரு எம்.பி, மூன்று இடதுசாரி எம்.எல்.ஏக்கள் மற்றும் மூன்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர்.

இந்த வார தொடக்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ அரிந்தம் பட்டாச்சார்யா பாஜகவில் சேர்ந்து, சில ஆளும் கட்சித் தலைவர்கள் தனது தொகுதியில் வளர்ச்சிப் பணிகளை செய்ய அனுமதிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். நாடியா மாவட்டத்தில் உள்ள சாந்திபூர் தொகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.வும், மம்தா பானர்ஜி ஆட்சி மாநில இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கவில்லை என்று குற்றம் சாட்டினார். முன்னதாக, ராஜீப் பானர்ஜி மற்றும் டி.எம்.சி எம்.எல்.ஏக்கள் பைசாலி டால்மியா மற்றும் சாதன் பாண்டே மற்றும் பலர், டி.எம்.சி தலைவர்களின் செயல்பாடுகள் பற்றிய குறைகளை தெரிவித்தனர்.

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் 2021 ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்தலில் முக்கிய போட்டி திரிணாமுலுக்கும் பாஜகவுக்கும் இடையே நடைபெறுகிறது. இத்தேர்தலில் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் ஒரு கூட்டணியை உருவாக்கியுள்ளன, இருப்பினும் இரு கட்சிகளுக்கும் இருக்கை பகிர்வு பிரச்சினையில் இன்னும் உடன்பாட்டை எட்டவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com