இன்டர்சிட்டி விரைவு ரயில் திருச்சியிலிருந்து திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு

இன்டர்சிட்டி விரைவு ரயில் திருச்சியிலிருந்து திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு
இன்டர்சிட்டி விரைவு ரயில் திருச்சியிலிருந்து திருவனந்தபுரம் வரை நீட்டிப்பு
Published on

திருச்சியில் இருந்து நெல்லை செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயில் இன்று முதல் திருவனந்தபுரம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தென்மாவட்டங்களில் பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயிலாக திருச்சியில் இருந்து நெல்லைக்கு இன்டர்சிட்டி ரயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலை நெல்லையில் இருந்து திருவனந்தபுரம் வரை நீட்டித்து கடந்த மார்ச் மாதம் ரயில்வே அமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி இன்று முதல் இன்டர்சிட்டி ரயில் திருச்சியில் இருந்து நெல்லை வழியாக திருவனந்தபுரம் வரை செல்கிறது.

திருச்சி ரயில் நிலையத்தில் நடைபெற்ற தொடக்கவிழாவில், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக மக்களின் கோரிக்கையை‌ மத்திய ரயில்வேத்துறை‌ அமைச்சர் நிறைவேற்றி உள்ளதாக தெரிவித்தார். இந்த சேவை தென்மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். திருச்சியில் இருந்து இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் காலை 7.05 மணிக்கு புறப்படுகிறது. 9.20 மணிக்கு மதுரைக்கும், 12.30 மணிக்கு நெல்லைக்கும் இந்த ரயில் வந்து சேருகிறது. பின்னர் இங்கிருந்து புறப்பட்டு 3.25 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடைகிறது. அதன்பின் திருவனந்தபுரத்தில் இருந்து இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் காலை 11.55 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு 2.35 மணிக்கு வந்து சேருகிறது. பிற்பகல் 2.40 மணிக்கு இங்கிருந்து புறப்பட்டு 5.20 மணிக்கு மதுரைக்கும், இரவு 8.15 மணிக்கு திருச்சிக்கும் இந்த ரயில் சென்று சேருவது குறிப்பிடத்தக்கது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com