திருச்சி தனியார் நகைக்கடையின் சுவற்றில் துளையிட்டு கொள்ளையடித்த பிரபல கொள்ளையன் முருகன் சிறையில் கவலைக்கிடமாக உள்ளார்.
திருச்சி தனியார் நகைக்கடையில் சுவரை துளையிட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொள்ளை சம்பவத்திற்கு தலைமையாக இருந்து செயல்பட்டது முருகன். அத்துடன் பஞ்சாப் நேஷனல் வங்கியிலும் முருகனும் அவனது கூட்டாளிகளும் தான் கொள்ளை அடித்தனர். பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட முருகன், பெங்களூர் சிறையில் உள்ளார்.
சில வாரங்களுக்கு அவரது உடல்நிலை மோசமடைந்ததால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்தார். மருத்துவர்கள் அவருக்கு ஒருமாத காலம் அவகாசம் கொடுத்து உள்ளனர். அவருடைய இடது கை, கால் வாதநோயால் செயல்படாமல் போய்விட்டது. பேச முடியாத நிலையில் தற்போது முருகன் உள்ளார்.
இந்நிலையில் அவரது வழக்கறிஞர் ஹரிபாஸ்கர், திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் ஒன்றில் முருகன் உடல்நிலை கவலைகிடமானதால், அவருக்கு சிகிச்சை அளிக்க பிணையில் விட வேண்டும் என மனுத்தாக்கல் செய்துள்ளார்.