ஓடிசா மாநிலம் டிட்லாகர் பகுதியில் பயணிகளின் ரயில், கட்டுப்பாடின்றி 10 கி.மீ வரை பின்னோக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அகமதாபாத்-புரி விரைவு ரயில் டிட்லாகர் ரயில்வே ஸ்டேஷனுக்கு நேற்று வந்தது. அப்போது இன்ஜினை ஒரு முனையில் இருந்து மறுபகுதிக்கு மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ரயில் பெட்டிகள் அசையாமல் இருப்பதற்கான பிரேக் போடப்படவில்லை. ஆனால் திடீரென்று இஞ்சின் இல்லாத நிலையில் ரயில் பெட்டிகள் பின்னோக்கிச் செல்ல ஆரம்பித்தன. அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டனர். ரயில் பெட்டிக்குள் இருந்த பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர். இன்ஜின் இல்லாமல் இந்த ரயில் பத்து கிலோமீட்டர் வரை சென்றுவிட்டது. பின்னர் தண்டவாளத்தில் கற்களை போட்டு ரயிலை நிறுத்தியுள்ளனர்.
முறையாக பிரேக் போடப்படவில்லையா அல்லது அதில் கோளாறா என்பது தெளிவாக தெரியில்லை. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.